சொல் பொருள்
‘சுவைபார்த்தல்’ என்னும் பொருளில் உப்புப் பார்த்தல்
பருத்தல் என்னும் பொருளில் வரும் ‘உப்புதல்’
சொல் பொருள் விளக்கம்
உப்புணா எல்லா வளர்ச்சிக்கும் முதற்காரணமாய் இருக்கும் செந்நீரையும் எலும்பையும் செழுமை செய்து வலுவூட்டி வருகின்றது. பருத்தல் என்னும் பொருளில் வரும் ‘உப்புதல்’ என்னும் சொல் இதன் செழுமைப் பயனை நமக்கு நினைவூட்டும். சுவையுள்ளும் இதனை முதன்மைச் சுவையாக நம்முன்னோர் கருதி வந்தனர் என்பது ‘சுவைபார்த்தல்’ என்னும் பொருளில் உப்புப் பார்த்தல் என்னும் தொடரை வழங்கி வருதல் கொண்டுந் தெளியலாம். மேலும் விரும்பத்தக்க இனிமை இயல்புகட்கெல்லாம் பண்டைக்கால முன்னோர் உப்பென்னும் மொழியை மிக அழகாக வழங்கி வந்திருக்கின்றனர்.
‘கூடலிற் றோன்றிய உப்பு’ எனத் திருவள்ளுவரிலும்,
“உயங்காக்கால் உப்பின்றாம் காமம்” என நாலடியாரிலும்,
“அமைத்தோளாய் நின்மெய்வாழ் உப்பு” என அகநானூற்றிலும்
வாராநின்ற வழக்குகள் அறிந்து இன்புறற்பாலன. இம்முதன்மை கருதியே நம் நாட்டவர் உணவிடுதலை ‘உப்பிடுதல்’ என்றே வழங்குகின்றனர். “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்னும் முதுமொழியே இதற்கு உறு பெருஞ் சான்றாம். (சங்க நூற் கட்டுரைகள். II . 13.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்