சொல் பொருள் விளக்கம்
1. (வி.அ) அப்பால்,
2. (பெ) 1. தேவர்கள், மேலுகத்தார், 2. உயரமான இடம், 3. தொலைதூரம் 4. மேலுலகம், மேலிடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beyond, celestials, elevated place, long distance, celestial world
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – குறு 11/6,7 வலிய வேலையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கும் அப்பால் மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும் உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் – பரி 11/70 தேவர்கள் வாழும் ஒளி மிகுந்த வானத்தில் ஊர்ந்து செல்லும் எம் இல் அயலது ஏழில் உம்பர் மயில் அடி இலைய மா குரல் நொச்சி – குறு 138/2,3 எமது வீட்டுக்கு வெளியேயுள்ள ஏழில்மலையின் உச்சியில் மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின் பல் நாள் உம்பர் பெயர்ந்து – அகம் 368/12 பல நாளும் (நம்மைப் பிரிந்து) தொலைவிடம் சென்று ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே – ஐங் 401/5 இந்த உலகத்திலும், மேலுகத்திலும் இத்தகைய காட்சியைப் பெறுதல் மிகவும் அரியது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்