சொல் பொருள்
குண்டு என்பது உருண்டை என்னும் பொருளை அன்றி ஆழம் என்னும் பொருள் தருவது. பள்ளமாக அமைந்த வயல் வளமுடைய ஊர், குண்டு எனவும் வழங்கும்
சொல் பொருள் விளக்கம்
குண்டு என்பது உருண்டை என்னும் பொருளை அன்றி ஆழம் என்னும் பொருள் தருவது. பள்ளமாக அமைந்த வயல் வளமுடைய ஊர், குண்டு எனவும் வழங்கும். எ – கா: வெற்றிலைக் குண்டு (வத்தலக்குண்டு). கூத்தியார் குண்டு. (நட்டுவாங்கம் பிடித்தார்க்கு வழங்கப்பட்ட ஊர்) தழை இலை மட்கி உரமாவதற்காக இட்டுவைக்கும் இடம் குழியாக இருப்பதால், அதனைக் குண்டு என்னும் ஆட்சி உண்டாகி, உரக்குழியை ‘உரக்குண்டு’ என வழங்குதல் குமரி மாவட்ட வழக்கில் உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்