Skip to content

சொல் பொருள்

(பெ) உரம், மனவலிமை, திண்மை, பார்க்க உரம்

சொல் பொருள் விளக்கம்

உரம், மனவலிமை, திண்மை, பார்க்க உரம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை – நற் 3/6

நடுவழியில் வந்ததும், நம் வலிமையனைத்தையும் கொன்றதுமான மாலைக்காலத்தில்

உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் – புறம் 60/9

வலிமையையுடைய, பாரம் பொறுக்கும் காளையைப் போன்ற எம் அரசன்

உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து – புறம் 206/3

தாம் நினைத்ததை முடிக்கும் வலிமையையுடைய நெஞ்சினையுடைய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *