சொல் பொருள்
(வி) தோல் அல்லது பட்டையை நீக்கு
2. (பெ) தோல்,
3. (பெ.அ) உரிய,
சொல் பொருள் விளக்கம்
1. தோல் அல்லது பட்டையை நீக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
peel off
skin
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் – ஐங் 35/2 பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின் அரவு உரி அன்ன அறுவை நல்கி – பொரு 83 பாம்புத்தோல் போன்ற (மெல்லிய) ஆடையை அணிவித்து வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும் – குறி 213 விசும்பில் தமக்குரிய இருப்பிடத்தையுடைய பொலிவு பெற்ற தேவர்களும் விரும்பும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்