சொல் பொருள்
ஒரு மூலம் பலவகைச் சொற்களும் தோன்றுவதற்கு இடம் தந்து நிற்பது தமிழுக்குரிய சிறப்புக்களில் ஒன்றாகும். இவ்வாறு சொற்கள் தோன்றுவதற்கு உரியனவாக இருத்தலினால்தான் ஆசிரியர் தொல்காப்பியர் வேர்ச்சொற்களை உரிச்சொல் என்று அழைத்தார்
சொல் பொருள் விளக்கம்
காய் என்ற வேர்ச்சொல் ‘நீவெறு’ “சூடாகு’ ‘சூடாக்கு’ என்ற பொருளைத் தரும் முன்னிலை ஏவலாக வரும். அச்சொல்லே பெயர்ச் சொல்லாக நின்று, ஒன்றின் காய் (மாங்காய்) என்ற பொருளிலும் வரும். ‘காய் கொம்பு’ என்றால் காய்கின்ற, காய்ந்த, காயும் – கொம்பு என்று பொருள் தரும். காய்ந்தது, காய்த்தது என்ற சொற்களில் பகுதியாகவும் வந்துள்ளது. இனி, காய்தல், காய்ச்சல், காயல் என விகுதிகள் பெற்ற பெயர்களாகவும் வரும். இவ்வாறு ஒரு மூலம் பலவகைச் சொற்களும் தோன்றுவதற்கு இடம் தந்து நிற்பது தமிழுக்குரிய சிறப்புக்களில் ஒன்றாகும். இவ்வாறு சொற்கள் தோன்றுவதற்கு உரியனவாக இருத்தலினால்தான் ஆசிரியர் தொல்காப்பியர் வேர்ச்சொற்களை உரிச்சொல் என்று அழைத்தார் போலும். அதன் இயல்பைப் பற்றிக் கூறுங்கால், “பெயரினும் வினையினும் மெய்தடுமாறி” வரும் என்று கூறி யிருப்பது உண்மை நிலையை அறிவிக்கும் பொருட் செறிவு மிக்க கூற்றாகும். (பழந்தமிழ். 191.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்