சொல் பொருள்
வி.எ) உராய்ந்த
சொல் பொருள் விளக்கம்
உராய்ந்த
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rubbed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக்களிறு செங்கோல் வால் இணர் தயங்க தீண்டி சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து அல்குறு வரி நிழல் அசைஇ – அகம் 121/6-9 சேற்றினைக் கொண்டு அளைந்து கொண்ட நிறம் வேறுபட்ட வலிய ஆண்யானை சிவந்த காம்பினையுடைய வெள்ளிய கொத்துக்கள் அசைய தனது துதிக்கையால் பற்றி தினவு பொருந்திய தன் முதுகினை உராய்ந்துகொண்டதாய, வழியின்பக்கத்திலுள்ள வெண்கடம்பின் சுருங்கிய வரிவரியாகவுள்ள நிழலிலே தங்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்