சொல் பொருள்
உருவுதல் – பறித்தல், தடவல்
சொல் பொருள் விளக்கம்
‘மொச்சைக்காய் உருவுதல்’ ஒரு பறிப்பு முறை. ஒவ்வொன்றாக எடுக்காமல் ஒரு கையை மடக்கிக் கூட்டிப் பிடித்துக் கொத்தாகப் பறித்தல் உருவுதலாம். கட்டில் இருந்து ஒரு நோட்டை எடுத்தல் உருவித் தருதல் எனப்படும். “உருவி உருவித் தந்தவன்; பேச மாட்டாய்” என்பது இகழ்வுரை. சுளுக்கு ஏற்படு மானால் விளக்கெண்ணெய் தேய்த்து உருவுதல் தடவுதல் என்பது. உருவுதல். வினைக்கு முன் வினை. ‘தடவி உருவல்’ என்பது இணை முறை. இடக்கரடக்காகவும் இவ்வுருவல் வழங்கும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்