Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. உருவிழந்துபோ, உருவிழக்கச்செய்,  2. கெடு, அழி, 

2. (பெ) 1. சமைப்பதற்காக எரியும் அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் நீர், 2. கொல்லன் பட்டறை,

சொல் பொருள் விளக்கம்

1. உருவிழந்துபோ, உருவிழக்கச்செய்,  2. கெடு, அழி, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be dispersed, not in order, be ruined, ruin, water kept in a vessel on a live oven for cooking, smith’s forge

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி – நற் 310/6

உண்மையைத் தொலைத்த உன் நாவினால் உருக்குலைந்துபோய் வரும் குறுமொழிக்கு

ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/19

தமக்கு வரும் கேட்டினை அஞ்சித் தன்னை அண்டினோரை, அவர் அழிந்துபோகாமல் காத்துப் பேணி,

சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் – அகம் 169/7

சுனையில் கொண்ட இனிய நீரால் ஆன சோற்றுக்கான உலையில் கூட்டி ஆக்கும்

மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன – பெரும் 207

மிதி(த்து ஊதுகின்ற) உலை(யைக் கொண்ட)கொல்லனுடைய முறிந்த கொறடை ஒத்த

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *