Skip to content

சொல் பொருள்

(வி) 1. நீவிவிடு, கோது, 2. உதிர்த்துவிடு,

சொல் பொருள் விளக்கம்

1. நீவிவிடு, கோது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

preen as birds their feathers, women running fingers through the hair to dry it

strew, throw about

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும் – குறு 228/1,2

விழுதுகள் தொங்கும் தாழையின் மலரும்நிலையிலுள்ள செழுமையான மொட்டு
கொக்குகள் தம் சிறகைக் கோதும்போது விரியும் இறகுகள் போன்று மடல் அவிழும்

ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே – நற் 319/1,2

ஊதைக்காற்று
பூந்தாதுக்களை உதிர்த்துவிடும் கடற்கரைச் சோலையும் பொலிவிழந்தது;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *