சொல் பொருள்
உள்ளாளி – நோட்டம் பார்ப்பவன், கூட்டுக் கள்வன்
சொல் பொருள் விளக்கம்
உள்ளாளி மறைவாகவும் துணையாகவும் இருந்து பணி செய்யும் ஆள். அவன் உள்ளாளி எனவும் ஆவான். அவன் செயல் உள்ளாம். ‘ஆளம்’ ஆளின் தன்மை. எந்தத் திருட்டுக்கும் உள்ளாள் இல்லாமல் முடியாது என்பது, உள்ளாள் ஒருவன் துப்புத் தந்தால் தான் வெளியாள் துணிந்து புகுவான், வெளியாள் புகுந்து திருடும் போது உள்ளாள் குறிப்புத் தருவான்; பாதுகாப்பு தருவான். “கள்ளாளியை விடு ஐயா. உள்ளாளியைக் கண்டுபிடி” தானே துப்புத் துலங்கும் என்பது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்