சொல் பொருள்
(வி) 1. நினை, 2. திரும்ப நினை, 3. கருது, எண்ணு,
சொல் பொருள் விளக்கம்
1. நினை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
think of, recall, consider
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே – ஐங் 487/1 இதுவே பிரிந்திருப்போர் ஒருவரையொருவர் நினைத்தேங்கும் மாலைக்காலம்; உள்ளு-தொறும் நகுவேன் தோழி —- ————————— ———- குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின் வான் கோல் எல் வளை வௌவிய பூசல் சினவிய முகத்து சினவாது சென்று நின் மனையோட்கு உரைப்பல் என்றலின் ——— ——————— ————————- ———————– ——————————- அதிரும் நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே – நற் 100 நினைத்து நினைத்துச் சிரிக்கின்றேன் தோழி! ——————– ————————- ————————- ஆழமான நீரில் முளைத்த ஆம்பல் பூவையுடைய குளிர்ந்த துறையையுடைய ஊரன் இனிதாய்க் கமழும் என் கூந்தலைப் பற்றி இழுத்து, என் கையிலுள்ள நீண்டு திரண்டு ஒளிபொருந்திய வளையல்களைக் கவர்ந்த தகராறினால் வெளியில் கோபங்கொண்ட முகத்தோடு, உள்ளத்தில் கோபமில்லாது, சென்று உனது மனைவிக்கு உரைப்பேன் என்று சொன்னதினால், ——————- ———————- ——————————————- —————————————- —————————– அதிர்ந்துபோன அந்த நல்லவன் நடுங்கிப்போய் துன்புற்ற நிலையினை வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே உள்ளியது முடித்தி வாழ்க நின் கண்ணி – பதி 54/1,2 ஈகை நெஞ்சுடையவன் என்று சொல்லப்படுவதால் உன்னைக் காண்பதற்காக வந்திருக்கிறேன், நான் எண்ணியதை முடித்துத்தருவாய்! வாழ்க! உன் தலைமாலை!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்