சொல் பொருள்
ஊமைக் குறும்பு – வெளியே தெரியாமல் குறும்பு செய்தல்
சொல் பொருள் விளக்கம்
சிலர் தோற்றத்தால் மிக ஊமையாக இருப்பர். ஆனால் ஓயாது பேசித்திரிவர். செய்யாத குறும்புகளையும் செய்து விடுவர். அத்தகையவரையே ‘ஊமைக் குறும்பு’ என்பர். ‘குறும்பு ‘குசும்பு’ என வழக்கில் உள்ளது. இங்கு ஊமை என்பது ஊமைத் தன்மையைக் குறியாமல், மிகுதியாக வெளிப்படப் பேசாமல் என்னும் பொருள் தருவதாம். ஊமைக் குறும்பன் ஊரைக் கெடுப்பான் என்பது பழமொழி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்