சொல் பொருள்
(பெ) 1. நெடுங்காலம், 2. வாழ்நாள், 3. யுகம், 4. ஊழ்வினை, விதி,
சொல் பொருள் விளக்கம்
1. நெடுங்காலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
very long time, life-time, aeon, fate
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊழி வாழி பூழியர் பெருமகன் – புறம் 387/28 நெடுநாள் வாழ்வாயாக, பூழியர் தலைவனே! செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி – நற் 93/6 நாங்கள் செல்கின்றோம்! நீயும் எழுந்திருப்பாய்! சிறந்து விளங்குக உன் வாழ்நாட்கள்; உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் – பரி 2/6 எந்த உருவமும் காணப்படாத முதல் ஊழிக்காலமும், அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் – கலி 130/4 அரசன் இறந்தபின் அவனோடு மாய்ந்துவிட்ட, நல்ல ஊழ்வசத்தால் உண்டான செல்வம் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்