சொல் பொருள்
(பெ) 1. கூர்மை, 2. அரிவாள், வாள், 3. வேல்முனை, 4. வேல், 5. இரும்பினாலான எதேனும் ஒரு கருவி,
சொல் பொருள் விளக்கம்
1. கூர்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sharpness, garden knife, sickle, sword, the front part of a lance, lance, any instrument made of iron
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 299,300 நெடிய முழையாகிய இருப்பிடத்தில் வசிக்கும் கூர்மை பொருந்திய முள்ளுடைய முள்ளம்பன்றி தாக்கியதால் தவறிவிழுந்த குறவருடைய அழுகையும் எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை – பதி 12/16 அரிவாளால் பிளந்து அறுக்கப்பட்ட வெண்மையான ஊனின் கொழுத்த இறைச்சித்துண்டுகளையும் புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர – பதி 50/9 உயர்ந்த தோலாகிய கேடகங்களுக்கு மேல்பக்கத்தில் வேல்முனைகள் மீன்களாய் மின்னியொளிர, ஒளிறு இலைய எஃகு ஏந்தி – புறம் 26/5 மின்னுகின்ற இலைப்பகுதியையுடைய வேலினை ஏந்தி எஃகு உறு பஞ்சி துய்ப்பட்டு அன்ன – அகம் 217/2 இரும்பினாலான கருவியால் கடையப்பட்ட பஞ்சு மென்மையுற்றாற்போன்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்