சொல் பொருள்
எச்சு என்பது மிகுதி என்னும் பொருளில் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
எச்சம் என்பது மிகுதி (மீதி)யாக வைத்துச் செல்வது என்னும் பொருளது. எஞ்சுதல் என்பதும் மிகுதல் பொருளதே. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் என்னும் குறளில் எஞ்சுதல் (மிகுதல்) என்னும் பொருளிலேயே வந்துளது. எச்சு என்பது மிகுதி என்னும் பொருளில் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது. சடுகுடு (கபடி) விளையாட்டில் எச்சுப்போதல் இளைத்துப் போதல் மூச்சுவிடுதல் என்னும் பொருளில் வரும்.
அது எய்ப்பு – இளைப்பு வழிப்பட்டது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்