சொல் பொருள்
எடுத்தாட்டல் – பிறருக்குரியதை முன்னின்று செய்தல்
சொல் பொருள் விளக்கம்
நம்மால் என்ன செய்ய முடியும் எனச் சில செய்திகளைச் சிலர் கைவிட்டுவிடுவர். அவர்க்கு வேண்டியவர் அல்லது வேண்டியவராக முன் வருபவர். “நாம் என்ன அப்படி விட்டு விடுவது; நீங்கள் பாட்டுக்கு என் பின்னால் வாருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்” எனத் தலைப்பட்டுச் செய்வர். இத்தகையவர்கள் செயலை ‘எடுத்தாட்டுதல்’ என்பது வழக்கு. அவர் செயலைப் படுக்கப் போட்டுவிட்டார். இவர் அதனை எடுத்து ஆட விடுகிறார். ஆதலால் இவ்வாறு கூறப்படுகிறதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்