சொல் பொருள்
(பெ) எளிமை
சொல் பொருள் விளக்கம்
எளிமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Easiness, as of acquisition, of access
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின் எண்மை செய்தனை ஆகுவை நண்ணி – அகம் 288/8 கனிகள் முதிர்ந்த இந்தப் பக்கமலையில் நாங்கள் தனித்திருப்பதைக் காண்பதனால் எங்களை எளிதாக அடைதற்குரியவர்கள் என்று நினைத்துவிட்டாய் தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் – புறம் 43/18,19 தமக்குப் பிழைசெய்தவரைப் பொறுத்துப்போகும் தலைமைப்பண்பு இந்தக் குடியில் பிறந்தவர்க்கு எளிதாக வருவதாகும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்