சொல் பொருள்
எதுகை – இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை.
மோனை – முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.
சொல் பொருள் விளக்கம்
எதுகை மோனை இல்லாத ‘பா’ பாவன்று, பாவின் அழகு எதுகை மோனைகளில் தொக்கிக் கிடத்தல் கண்கூடு. எதுகை மோனை, அறியார் வாக்கில் ‘எகனை மொகனை’ என வழங்கப்படுகின்றது.
செய்யுள்களுக்கு உரிய எதுகை மோனை பழமொழிகளிலும் பயில வழங்கும்.
“ஆடிப்பட்டம் தேடி விதை,” “சித்திரை மாதப் புழுதிபத்தரை மாற்றுத்தங்கம்”- இவை எதுகை.
“தைப்பனி தரையைப் பிளக்கும்”-இவை மோனை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்