சொல் பொருள்
(பெ) 1. மதில்பொறி, 2. கரும்பு ஆலை, 3. ‘இயன் திறம்’ (இயங்கும் தன்மையது)
சொல் பொருள் விளக்கம்
எந்திரம் என்ற சொல் பொறி (‘machine’) ஐக் குறித்துள்ளது. ‘இயன் திறம்’ (இயங்கும் தன்மையது) என்பதுவே எந்திரம் என்று மாறியுள்ளது. (புறம். 322.) (பழந்தமிழ். 240.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Engine or other machinerry of war mounted over the battlements of a fort;
sugarcane press
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில் – பதி 53/7 எந்திரப் பொறிகளும் எய்யப்படும் அம்பும் அமைக்கப்பட்ட கோட்டை வாயில் கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் – ஐங் 55/1 கரும்பினைப் பிழியும் எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்