சொல் பொருள்
(பெ) 1. பல், 2. ஈறு, 3. யானை, பன்றி இவற்றின் தந்தம்,
சொல் பொருள் விளக்கம்
1. பல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tooth, gums, Tusk of the elephant, of the wild hog
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் – ஐங் 185/2 ஒளிவிடும் முத்தினைப் போன்றிருக்கும் பற்கள் பொருந்திய சிவந்த வாயினையும் வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் – குறு 267/4 வெண்மையான ஈறுகளில் ஊறிய குற்றமற்ற இனிய நீரையும் பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117 போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்