சொல் பொருள்
எரிச்சல் – காந்தல்
நமைச்சல் – தினவு எடுத்தல்
சொல் பொருள் விளக்கம்
கண்ணெரிச்சல் என்பது கண் காந்துதலாம். அது வெப்பத்தால் ஏற்பட்டதாம். வயிற்றெரிச்சல் என்பதோ மனஎரிச்சலைச் சுட்டி நிற்பதாம்.
ஊறுதலும் அதனால் உண்டாகும் வலியும் தினவு அல்லது நமைச்சலாம். ‘செந்தட்டிச் செடி’ ‘தட்டுப்பலாச் செடி’ ஆகியவை பட்ட இடம் கடுமையான நமைச்சல் உண்டாக்கும். நமைச்சலுக்குச் சொறிந்தால் புண்ணாகித் துன்பம் மிகும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்