சொல் பொருள்
திருமணச் சடங்கு நடத்தும் பெண்மணியை எழுதில்லக் காரி என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
திருமணச் சடங்கு நடத்தும் பெண்மணியை எழுதில்லக் காரி என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு. திருமணச் சடங்கு கரணம் எனப்பட்டதும், கரணம் செய்வார் கரணத்தியலார் எனப்பட்டதும், மகளிர் நடத்தும் கரணச் சடங்கே நம் பண்டை மணச்சடங்கு என்பதை அகநானூறு (86) குறிப்பதாலும் இவ்வழக்கத்தின் மூலங்கள் அறியவரும். மேலும் பூப்பு நீராட்டு, திருமணச் சடங்கு என்பவை இந்நாள்வரை தொல்குடி வழியரிடத்தெல்லாம் மகளிர் நடத்துவதாகவே இருத்தலும் அறியத்தக்கது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்