சொல் பொருள்
(பெ) 1. போதல், 2. உயர்ச்சி
சொல் பொருள் விளக்கம்
போதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
going, height
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்கு சொல்லாது ஏகல் வல்லுவோரே – குறு 79/5-8 பயணவழிகள் பொருந்திய அழகிய குடிகளையுடைய சிறிய ஊரில் தாம் தங்கிவிட்டாரோ? நாம் அவர் (பிரிந்து செல்வதாகக்)கூறுவதைப் பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்று கூறிய தவறினால் நம்மிடம் சொல்லாமல் போவதைச் செய்யக்கூடியவர் காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டும் தாம் அறி செம்மை சான்றோர் கண்ட கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் – குறு 265/1-5 காந்தளின் அழகிய கொழுவிய மொட்டை, தானாக மலரட்டும் என்று காத்திருக்காமல் வண்டு அதன் வாயைத் திறக்கும் போது, முன்பும் தாம் அறிந்த செம்மையுள்ளம் கொண்ட சான்றோரைக் கண்ட கடமைகளை அறிந்த மக்கள் போல, (காந்தள்) இடம் கொடுத்து, இதழ்களைக் கட்டவிழ்க்கும் உயர்ந்த மலைகளையுடைய தலைவன் – ஏகல் – உயர்ச்சி – பொ.வே.சோ உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்