சொல் பொருள்
ஏண் – உயரம்
கோண் – வளைவு அல்லது கோணல்.
சொல் பொருள் விளக்கம்
ஏண் உயர்வுப் பொருள் தருதல் ஏணியை எண்ணிக் காண்க. ஏண் உயரமாதல் ‘சேண்’ என்பதிலும் அறிக. உயர்ந்த தோளை ஏணுலாவிய தோள்’ என்றார் கம்பர்.
கோணல் வளைவாதல், கோணுதல், கூன், கூனி, கூனை, குனிவு முதலியவற்றில் கண்டு கொள்க. கோணற்கால், கோணல் நடை, கோணன் என்னும் ஆட்சிகளில் கோணல் தெளிவாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்