சொல் பொருள்
ஏற – அளவுக்குச் சற்றே உயர.
குறைய – அளவுக்குச் சற்றே குறைய.
சொல் பொருள் விளக்கம்
மிகச் சரியாகச் சொல்ல முடியாத ஒன்றை ஏறக்குறைய என்பது வழக்கு. திட்டமாக வரையறுக்கப் படாததற்கே ‘ஏறக்குறைய’ என்பர். இது, ஏறத்தாழ எனவும் வழங்கப் பெறும். இதனுடன் ‘சற்றே ஏறக்குறைய’ ‘சற்றே ஏறத்தாழ’ என்பதும் உண்டு. குறிப்பாக எண் தொடர்பான செய்திகளிலேயே ஏறக்குறைய முதலியன பெரிதும் வழங்கப்படும். ‘ஏறக்குறைய ஈராயிர உரூபா செலவாகும்’ என்பது போலவரும். ‘ஏறக்குறைய முடிந்த நிலை தான்’என்பது போல அருகி வழங்கும். கூடக் குறையக் காண்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்