1. சொல் பொருள்
கொங்கு நாட்டில் அப்பா என்னும் முறைப்பெயர் ஐயர் என்றும் ஐயார் என்றும் மிக இயல்பாக வழங்கப் படுகிறது
2. சொல் பொருள் விளக்கம்
கொங்கு நாட்டில் அப்பா என்னும் முறைப்பெயர் ஐயர் என்றும் ஐயார் என்றும் மிக இயல்பாக வழங்கப் படுகிறது. ஐயன் என்பது தந்தையின் பெயர். அவனுக்குப் பின் குடும்பப் பொறுப்புடையவன் அண்ணன் ‘தம் ஐயன்’ (தமையன்) என்பதால் அறியலாம். “முன்னின்று மொய்யவிந்தார் என் ஐயர்” என்பது தந்தையைக் குறிக்கும் இலக்கிய ஆட்சி.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்