சொல் பொருள்
மாதந்தோறும் பெறும் படியை ஒடம்படி என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு
மாடித்தளத்தில் சார்த்தி, அதன் வழியாக ஏறும் வாயில் ஒடம்படி வாயில்
சொல் பொருள் விளக்கம்
மாதந்தோறும் பெறும் படியை ஒடம்படி என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. உடன்பட்டு ஏற்றுக் கொண்ட தொகை உடம்படி எனப்பட்டு, ஒடம்படி என உகர ஒகரத்திரிபாகி இருக்கும். உடன்படிக்கை – உடம்படிக்கை – ஒடம்படிக்கை என்பவற்றை நினைக. உடன்பாடு என்பது ‘உடம்பாடு’ எனவருதல் வள்ளுவம்.
மாடியில் ஏறுவதற்கு, படிக்கட்டு அமைக்காமல், ஏணிப்படி அமைத்து, அவ்வேணியை மாடித்தளத்தில் சார்த்தி, அதன் வழியாக ஏறும் வாயில் ஒடம்படி வாயில் என்றும், படி, ஒடம்படி என்றும் வழங்குதல் நெல்லை, முகவை மாவட்ட வழக்குகள். அவ் வாயில் அடைப்பு, பூட்டு உடையதாக இருத்தலும் உண்டு. மாடியுடன் பொருந்திய படி உடன்படி என வழங்கி ஒகரத்திரிபு பெற்றிருக்கும். இது நாஞ்சில் நாட்டு வழக்கிலும் இருத்தலால் தென்னக வழக்கு எனலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்