சொல் பொருள்
ஒண்ணடி – ஒன்று
மண்ணடி – மண்
சொல் பொருள் விளக்கம்
அடி என்பது அடியைக் குறிக்காமல் சார்ந்த இடத்தைக் குறித்து வந்தது. ‘இரயிலடி’ ‘தேரடி’ ‘செக்கடி’ என்பவனற்றை அறிக. எந்த ஒன்றுக்கும் மண்ணுக்கும் உள்ள சார்பு மிக அழுத்தமானது. விட்டுப் பிரியாத, விட்டுவிட இயலாத சார்பு; ஒருகால் விட்டு விலகினும் எதிர்ப்பாற்றலால் நேர்வது அது. பின்னே ஒருகால் அவ்வெதிர்ப்பாற்றல் விலகியதும் பற்றி நிற்கும் ஈர்ப்பு அதற்கு உண்டு. இணைந்திருக்கும் உறவுகளை ‘ஒண்ணடி மண்ணடி’ என்பர். “எப்படி ஒண்ணடி மண்ணடியாக இருந்தார்கள்; இப்படிச் சண்டை போடுகிறார்களே” என்பர். வேறுபாடன்மை சுட்டுவது ஒண்ணடி மண்ணடியாம். ஒண்ணும் மண்ணும் என்பதும் இது
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்