சொல் பொருள்
ஒன்பது – பேடு, (அலி)
சொல் பொருள் விளக்கம்
‘ஒன்பது உருபா நோட்டு’ என்பதன் சுருக்கமே ஒன்பது என்பதாம். ஒன்று இரண்டு ஐந்து பத்து என பணத்தாள் நோட்டு உண்டேயன்றி ஒன்பது இல்லை. ஆதலால் ஒன்பது என்பது இல்லாதது’ என்னும் குறிப்பினது. ஆண்மை இழந்த பேடியின் தோற்றம் பெண்மைக் கோலமாகத் தோற்றம் தரும். கொண்டை வைத்தல் பூச்சூடல் மஞ்சட் குளிப்பு ஆயவும் உண்டு. பேச்சும் நடையும் பெண்மைச் சாயலாயமையும். இத்தகையரை ‘ஒன்பது’ என்பர். இது செல்லுபடியாகாதது என்பது குறிப்பாம். இத்தகையர் சுண்டல், கடலை வணிகம் செய்தல் காணக்கூடியது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்