சொல் பொருள்
ஒப்பேற்றுதல் – காலம் தள்ளல், சரிக்கட்டல், உயிரோடு இருத்தல்
சொல் பொருள் விளக்கம்
பிறர் பிறருக்கு ஒத்தபடி உண்ணவோ உடுக்கவோ வாய்ப்புப் பெறவோ முடியாத நிலையில் இருப்பவர்கள். தங்கள் நிலைமை வெளியாருக்கு வெளிப்படாத வண்ணம் பிறருக்கு ஒப்பாகத் தாமும் வாழ்வது போலக் காட்டிக் கொள்வர். இருப்பதை உண்டு உடுத்தாலும் வெளியாருக்குப் புலப்படாவண்ணம் திறமையாக நடந்து கொள்வர். இதற்கு ஒப்பேற்றுதல் என்பது பெயர். “ஏதோ ஒப்பேற்றி வந்தால் இப்படியோ காலம் போய்விடும்! காலம் மாறினால் எல்லாம் சரியாகிவிடும்” என நம்பிக்கை யோடு இருப்பர். ஒப்பேற மாட்டான்” எனின் பிழைக்க மாட்டான் என்னும் பொருளும் உண்டு. அது உயிரோடு இருத்தல் பொருளது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்