சொல் பொருள்
ஒய்யாரம் – பொய்ப்புனைவு செருக்கு
சொல் பொருள் விளக்கம்
‘சின்மலர் சூடல்’ என்பது அடக்க ஒடுக்கத்தின் அறிகுறி. ஆனால் சிலர் சின்மலர் சூடாமல் பன்மலர் சூடல் உண்டு. அப்பன்மலரும் சுமையெனக் காட்சியளிப்பதும் உண்டு. அத்தகு பன்மலர்க் கொண்டை ‘ஒய்யாரக் கொண்டை’ எனப்படும். அக்கொண்டை ஒப்பனையும், அதனையுடையார் நடையுடையும் எவரையும் புதுப்பார்வை பார்க்க வைப்பதாய் அமைந்திருக்கும். அந்த்தகையவரை ‘ஒய்யாரி’ என்பர். “ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம்; உள்ளே இருக்கும் ஈரும் பேனும்” “என்பது பழமொழி. “சிங்காரி ஒய்யாரி” என்பது நாடகப் பாட்டு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்