சொல் பொருள்
(பெ) 1. வண்டி, 2. வண்டிகளின் வரிசை,
சொல் பொருள் விளக்கம்
வண்டி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cart
caravan, train of carts
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ – புறம் 116/8 உப்பினை எடுத்துச்செல்லும் வண்டிகளை எண்ணிப்பார்ப்பாள் உப்பின் கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை உரன் உடை சுவல பகடு பல பரப்பி – அகம் 159/1-3 உப்பினது விலையைக்கூறி விற்ற உப்பு வணிகர் வளைந்த நுகத்தையுடைய வண்டிகளில் பூட்டிய வலி பொருந்திய பிடரியினையுடைய எருதுகள் பலவற்றையும் மேயும்படி அவிழ்த்துவிட்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்