Skip to content

சொல் பொருள்

(வி) 1. உயர்த்து, 2. கொடு,  3. தெய்வத்துக்குப் படைசெலுத்து,

சொல் பொருள் விளக்கம்

உயர்த்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

lift up, give, grant, offer to a deity

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் – பட் 299,300

திருமாவளவன் பகைவரை நோக்கி உயர்த்திய
வேலைக்காட்டிலும் வெம்மை மிக்கது காட்டுவழி

கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய
நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர் – புறம் 302/6,7

கைகளால் இசைக்கும் நரம்பினை இயக்கிப் பாடும் பாணர்களுக்குக் கொடுத்த
நிரம்பாத இயல்பினையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றூர்கள்

இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே – அகம் 282/18

மனையுறை தெய்வத்திற்குப்பலி செலுத்துவோமாக

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *