சொல் பொருள்
(வி) 1. செலுத்து, 2. உயர்த்து, 3. பாய்ச்சு, நுழை,
சொல் பொருள் விளக்கம்
செலுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cause to go, raise as the arm, insert, thrust into
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்-மார் – மது 321,322 சீரிய மரக்கலங்களைக் கடலில் இயக்குபவர்கள் அகன்ற இடத்தையுடைய நாடுகளினின்றும் நல்ல அணிகலன்களை எடுத்துச்செல்ல பால்கொண்டு மடுப்பவும் உண்ணானாகலின் செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சி – புறம் 310/2 பாலைக் கையில் ஏந்திக்கொண்டு வாயில் வைத்து உண்பிக்கவும் உண்ணாமையினால் கோபிக்காமல் கையை மட்டும் ஓங்கிய சிறிய கோலுக்கு அஞ்சி ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 118,119 (தம்மைப்)பொருந்தாத பகைவர் அஞ்ச, (அவரைக்)குத்தி, கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்