சொல் பொருள்
ஓடவில்லை – தெளிவாகவில்லை; செயல்பட முடியவில்லை
சொல் பொருள் விளக்கம்
திடுமென்று நிகழாத ஒன்று நிகழ்ந்து விடும். அதிர்ச்சிக்கு உரியதோ எதிர்பார்ப்பு இல்லாததோ நிகழ்ந்து விடலாம். அந்நிலைக்கு ஆட்பட்டவர் எனக்கு ஒன்றும் ‘ஓடவில்லை’ என்பர். என்ன செய்வதென்று தெரியவில்லை என்பதே ஓடவில்லை என்பதன் பொருளாம். இங்கு ஓடுதல் என்பது எண்ணத்தின் ஓட்டத்தையே குறித்தது. செயலற்றுப்போன நிலையையே ஓடவில்லை என்பது குறிக்கின்றதாம். சிக்கலான வினாவை எழுப்பி விடை கேட்கும்போதும் “எனக்கு ஒன்றும் ஓடவில்லை; நீங்களே மறுமொழி சொல்லுங்கள்” என்பதும் வழக்கில் கேட்பதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்