சொல் பொருள்
ஓடெடுத்தல் – இரந்துண்ணல்
சொல் பொருள் விளக்கம்
துறவோர் திருவோடு என்னும் ஓட்டை எடுத்து ஊண் வாங்கி உண்ணல் உண்டு. திருவோடு, தேங்காய் ஓடு போன்றதாகிய ஒரு மரத்தின் காயோடேயாகும். துறவுமேற்கொள்ளாத பிச்சையர் மண்சட்டியை எடுத்து இரந்துண்பதும் உண்டு. அதுவும் ஓடு எனவே படும். வறுப்பதற்கு உரிய ஓடு ‘வறை யோடு’ என்றும் கட்டடத்து மேற்தளத்தில் பரப்பும் சிற்றோடு தட்டோடு என்றும் வழங்கப்படுதல் அறிக. ஓடெடுத்துக் கொண்டு பிச்சையேற்று உண்பதே ஓடெடுத்தல் என வழக்காயிற்று. தமக்கு ஏழ்மையுண்டு என்பதை ஏற்க மனமில்லாதவர், “நானென்ன ஓடெடுத்துக் கொண்டா திரிகிறேன்” என்பர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்