சொல் பொருள்
ஓட்டைக்கை – சிக்கனமில்லாத கை
சொல் பொருள் விளக்கம்
ஓட்டைப் பானையோ சட்டியோ, உள்ள பொருளை ஒழுக விட்டுவிடும். ஓட்டைப் பானையைப், பாடம் கேட்ட அளவில் மறந்துவிடும் மாணவனுக்கு ஒப்பாகக் கூறுவர் இலக்கணர். நீரோடுவதற்கு வழியாக இருப்பது ஓடு. அதில் ஓட்டை விழுந்தால் ஒழுக விட்டு விடுமல்லவா!
சிலர் கையைக் காட்டு என்பர். கூட்டுக்கை வைத்துக் காட்டு என்பர். கை விரல்களைக் கூட்டி நீட்டினால் விரலுக்கு விரல் ஓட்டை – இடைவெளி – இருந்தால், உனக்கு ஓட்டைக் கை காசு தங்காது என்று சொல்லி விடுவர். இது குழந்தைகள் விளையாட்டிலும் உண்டு. செலவாளிகள் என்பதற்கு அல்லது சிக்கனமில்லாதவர் என்பதற்கு ‘ஓட்டைக்கை’ என்பது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்