சொல் பொருள்
(பெ) 1. கடல் பொங்கி உள்ளே வந்து பின்னர் உள்வாங்குதல், 2. கடல் அலை,
சொல் பொருள் விளக்கம்
கடல் பொங்கி உள்ளே வந்து பின்னர் உள்வாங்குதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the swelling and retreading of sea water, wave, billow
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெரும் கடல் ஓதம் போல – அகம் 123/13 பொங்கி வரும்போது இறா மீனுடன் வந்து, உள்வாங்கும்போது மாலையோடு மீளும் பெரிய கடல் பெருக்கம் போல முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் – அகம் 220/12 முழங்கும் கடலின் அலைகள் காலையில் அலையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்