சொல் பொருள்
ஓரம் – ஒன்றன் கடைசிப் பகுதி அல்லது விளிம்பு.
சாரம் – கடைசிப் பகுதியை அல்லது விளிம்பைச் சார்ந்த இடம்.
சொல் பொருள் விளக்கம்
ஓரமும் ஓரம் சார்ந்த இடமும் ஓரஞ் சாரம் ஆயிற்றாம். ‘ஓர் அம்’ என்பது ‘ஓரகம்’ என்பதன் தொகுத்தலாம். ஓரிடம் என்னும் பொருள் தரும் இச்சொல், ஒன்றன் எல்லை முடிவைக் குறித்து வந்தது. அதனைச் சார்ந்து அப்பால் உள்ள இடம் சாரமாம். ‘ஓரம் சாரமாகப் போ’ என்பது வழக்கு.
சார்பு, சாரல், சாரியை, சாரம் (கட்டட வேலைக்குப் பயன்படுத்தப்படும் பரண்) என்பவற்றைக் கருதுக. ஆக ஓரிடத்தின் உட்கடை ஓரம் புறக்கடை சாரம் ஆம் எனக் கொள்க. ஓரம் சாரம் ஆகாது என்பது நடுவுநிலை பற்றிய கருத்தில் வந்தது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்