சொல் பொருள்
(வி.அ) 1. ஒருசேர, 2. ஒன்றுபோல,
சொல் பொருள் விளக்கம்
ஒருசேர,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
unitedly, in the same manner
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார் – கலி 18/7 இளமை நலத்தையும், காம நுகர்ச்சியையும் ஒருசேரப் பெற்றவர்கள் வேரும் முதலும் கோடும் ஓராங்கு தொடுத்த போல தூங்குபு தொடரி கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் – குறு 257/1-3 வேரிலும், அடிமரத்திலும், கிளையிலும் ஒன்றுபோல் தொடுத்து வைத்தைதைப் போன்று தொங்கித் தொடர்ந்து கீழே தாழ்ந்தாற்போன்ற தணிந்த குலைகளைக் கொண்ட பலாமரங்களையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்