சொல் பொருள்
ஓலுப்படல் – அல்லலுறல்
சொல் பொருள் விளக்கம்
ஓலுறுத்தல் விளையாட்டுக் காட்டல், ஆடிப்பாடல், மகிழ்வுறுத்தல் பொருளது. செல்வக் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுள் ஒருத்தி ‘ஓலுறுத்தும் தாய்’ அவ்வோலுறுத்தல் குழந்தையின் அழுகை அமர்த்தி இன்புறுத்துபவள். இவ்வோலுப்படல் என்பது மகிழ்வு இழத்தல் மட்டுமின்றி அல்லலுறுதலுமாம். படல் என்பது இழப்புச் சுட்டும் சொல். உண்டாதல் பொருளிலும் படல் வரும். அழிதல் கெடுதல் பொருளிலும் வரும். பயிர் படுகிறது, பயிர்பட்டுப் போனது என்பவற்றிலுள்ள படுதல் அறிக. ‘பட்ட மரம்’ என்பதும் அறிக.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்