சொல் பொருள்
1. (வி) 1. முடிவுறு, 2. நீங்கு, நீக்கு,
2.(பெ) 1. ஓவியம், 2. முடிவுறுதல்,
கூரை, ஓடு, மாடி ஆகியவற்றில் இருந்து மழைநீர் சேர்ந்து வழியும் இடத்தை ஓவு என்னல் நெல்லை மாவட்ட வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கூரை, ஓடு, மாடி ஆகியவற்றில் இருந்து மழைநீர் சேர்ந்து வழியும் இடத்தை ஓவு என்னல் நெல்லை மாவட்ட வழக்கு. ஒழிவு – ஒழிந்திருத்தல் – ஓவு ஆகலாம். நீங்குதல் ஆகிய ஒரூஉ என்பது ஓவு ஆவதும் சொல்லியல் முறையே. பல் போய ஓட்டை வாயை ஓவாய் என்பது எண்ணத்தக்கது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cease, part with, separate, picture, cessation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓவாது ஈயும் மாரி வண் கை – குறு 91/5 முடிவுறாமல் (இடைவிடாமல்)கொடுக்கும் மழையைப் போன்ற வள்ளல்தன்மையுள்ள கையு மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா – கலி 81/14 மருந்து நீக்கமுடியாத என் நெஞ்சிற்கு அமிழ்தம் உண்டதைப் போல ஓவு கண்டு அன்ன இரு பெரு நியமத்து – மது 365 சித்திரத்தில் காண்பதைப் போன்ற இரண்டு பெரிய கடைவீதிகளில் மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 733 பெரிய முகப்பையுடைய முரசம் முடிவு இல்லாமல் முழங்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்