Skip to content

கக்கல் கழிச்சல்

சொல் பொருள்

கக்கல் – வாந்தியெடுத்தல்.
கழிச்சல் – வயிற்றோட்டம் போதல்

சொல் பொருள் விளக்கம்

ஒருவரைக் ‘கக்கல் கழிச்சல்’ ஒரே வேளையில் இருந்து வாட்டினால் அதனை ‘வாந்தி பேதி’ என்பர். ‘பேதி’ வயிற்றோட்டமாம்.

கழிதல் – மிகுதல், விட்டுப் போதல், அகலுதல் என்னும் பொருளுடையது. கழிவதைக் கூட விட்டு விடலாம். ஆனால் நாளையும் பொழுதையும் வீணே கழிப்பாரை ‘என்ன பிறவி?’ என்று ஏசாமல் தீராது! இத்தகையரைத் தானோ ‘கழிசடை’ என்பது!

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *