சொல் பொருள்
நடவு செய்து ஒருநாள் விட்டு மூன்றாம் நாளில் பாய்ச்சப்படும் தண்ணீரைக் கங்களவு என்பது உழவர் வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கங்கு = வெப்பம்; தீக்கங்கு. எரிந்த கட்டையின் தீத்துண்டைக் கங்கு என்பது முகவை, நெல்லை வழக்கு. கங்கு + அளவு = கங்களவு. நடவு நிலத்தில் பயிர், நில வெப்பத்தால் வாடிப்போகாமல் இருப்பதற்காக நடவு செய்து ஒருநாள் விட்டு மூன்றாம் நாளில் பாய்ச்சப்படும் தண்ணீரைக் கங்களவு என்பது உழவர் வழக்கு. எடுப்புத் தண்ணீர் என்பதும் அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்