சொல் பொருள்
(வி) 1. நெருக்கமாக இரு, 2. மிகுந்திரு,
சொல் பொருள் விளக்கம்
1. நெருக்கமாக இரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be densely packed, be in excess
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பன் மலர் காயாம் குறும் சினை கஞல கார் தொடங்கின்றே காலை – நற் 242/4,5 பல மலர்களையுடைய காயா சிறிய கிளைகளில் நெருக்கமாய்ப் பூக்க, கார்காலம் தொடங்கிவிட்டது இன்று காலையில் இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் – மலை 358 வியப்பு மிகுந்து விளங்கிய இனிய குரலையுடைய விறலியர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்