சொல் பொருள்
(பெ) கங்கணம்,
பனைநாரால் பின்னப்படும் பெரும் பெட்டி கடகப் பெட்டி எனப்படுவது குமரி, நெல்லை வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
கடகம் ஓர் அணிகலம். ஆண்கள் கடகம் அணிவதைக் கம்பர், “கடகக்கை புடைத்து” என்று குறிப்பார். கடகம் வளைவு உடையது. பனைநாரால் பின்னப்படும் பெரும் பெட்டி கடகப் பெட்டி எனப்படுவது குமரி, நெல்லை வழக்காகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bracelet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/21 மூட்டுவாய் செறிந்த முனகையில் உள்ள கடகத்துடன் கொடுத்தான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்