Skip to content

சொல் பொருள்

(பெ) 1. காப்பு,  2. சிறு துண்டம், 3. கழுத்தணி, 4. கைப்பிடி, காம்பு, 

சொல் பொருள் விளக்கம்

காப்பு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a string, one ties round one’s wrist as token of the fulfilment of a vow, piece cut off, necklace, handle; hilt, as of a spear

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து – நெடு 142

வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக்கயிறைக் கட்டி,

கரும்பின்
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/2,3

கரும்பின்
அடிப்பகுதியில் வெட்டிய துண்டினை உண்டது போன்ற

நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் – கலி 96/10

நீல மணிகள் கோத்த கழுத்தணியே வல்லிகையென்னும் கட்டப்பட்ட கழுத்துக்கயிறாகவும்

தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/3,4

ஒப்பற்ற மணி மாறி மாறி ஒலிக்கும் கடையாணி இட்ட காம்பினையும்
கூரிய முனையையும் உடைய நெடிய வேலையுடைய கோட்டை மறவர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *