Skip to content

சொல் பொருள்

(பெ) முன்றில், வீட்டின் முன்பக்கம்,

சொல் பொருள் விளக்கம்

முன்றில், வீட்டின் முன்பக்கம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

front yard of a house

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகு பலி வெண் சோறு போல – புறம் 331/11,12

நாடு காத்தலைச் செய்யும் வேந்தரது பெருமனையின் முன்றிலில் வீசப்படும் உயர்ந்த பலியாகிய வெள்ளிய சோற்றைப் போல – கடைமுகம் என்பதை, புறக்கடை – வீட்டின் பின்பக்கம் என்று உரையில் குறிப்பிட்டு, பின்னர் விளக்கத்தில் மன்னர் தம்முடைய முன்றிலில் பெருஞ்சோறு சமைத்து வாரி வழங்குவது போல என்று குறிப்பிடுகிறார் உரையாசிரியர் ஔ.சு.து.அவர்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *