சொல் பொருள்
கண்ணாம் பூச்சி காட்டல் – அங்கும் இங்குமாக ஏமாற்றல்
சொல் பொருள் விளக்கம்
கண்ணாம் பூச்சி என்பது கண்பொத்தி அல்லது கண்கட்டி விளையாடும் விளையாட்டு; கண்ணைக்கட்டி எங்கேயோ விட்டு விட்டு மறைந்து கொள்வதும் தேடிப் பிடிப்பதும் விளையாட்டாக உள்ளது. இச்சிறுவர் விளையாட்டுக்கு ஒப்பச் சிலர் இப்படி அப்படி என மாற்றி மறைத்து ஓட்டங்காட்டி ஏமாற்றித் திரிவர். அத்தகையரை “எனனிடம் கண்ணாம் பூச்சி காட்டுகிறாயா?” என்பது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்